Thursday 1 June 2023

ஜெயராஜ்யம்.

ஜெய இராஜ்யம்

அம்மா நீதான் பூமியு மிங்கே  
ஆளத்தான் தாயே வேண்டுமே-இராம
இராஜ்யம் உன்னால் நன்றுமே
தொடரத்தான் வாழ்க என்றுமே!

இராமச்சந்திரன் ஆண்ட நாடு—எம்ஜி
இராமச்சந்திரன் ஆண்ட நாடு
வேறு இராஜ்யம் இல்லை ஈடு
இரட்டை இலையவர் சின்னம்.
பறக்கும் கொடியதோ அன்னம்.

இராமன் கண்ட எம் தாயே—எம்ஜி
இராமன் கண்ட எம் தாயே
சேமம் செய்வதும் நீயே!
மக்கள் நலமே கதியென தாயே!
மாதா எமது தமிழகம் நீயே!

ஆறே போன்ற உன் கருணை-எம்ஜி
ஆரே போன்ற உன் கருணை
பாரே போற்றும் உன் பெருமை.
நூறு ஆண்டுக்கு மேலும் நீளும்-
பேரே உனது ஜெயமே ஆளும்.

கொ.பெ.பி.அய்யா.




Wednesday 31 March 2021

நல்லாத்தானே போகிறது.

நல்லாத்தானே போகிறது
நம்ம தமிழ் நாடு.
எடப்பாடி ஆட்சியிலே
என்ன குறை பாடு?

பேசாத பேச்சை எல்லாம்
கூசாமல் பேசுறாங்க.
நாசமா போகத்தானோ!
வீசுறாங்க வார்த்தைகள.

விவசாயி வாழத்தானே
விவசாயி முதல்வரானார்.
அவசியம் அவர்தானே
தவசியம்மா புதல்வரே.

விளாத்திகுளம் தொகுதிக்கே
சிலாக்கியம் சின்னப்பரே.
வாக்களித்து ஆதரிப்போம்.
ஆக்கம்பெற தேர்ந்தெடுப்போம்.

கொ.பெ.பி.அய்யா.




Sunday 28 March 2021

நாளைய வெற்றி.

நாளைய வெற்றி ஒருவிரல் மைய்யில்,
ஏழையர் நாமாளும் தமிழகம் கைய்யில்,
விவசாய முதல்வர் அவசியம் அதற்கு,
தவசியம்மா புதல்வற்கே ஓட்டு.

ஆளுக்கு ஆளு பணவங்கிக் கணக்கு,
நாளுக்கு நாளு உயர்விங்கு இருக்கு.
எடப்பாடியாரே முதல்வராம் நமக்கு,
கடமை அவற்கே போடுவீர் ஓட்டு.

குறையென்ன சொல்ல எடப்பாடி ஆட்சி,
திரைபின்னே மெல்வார் புறமாகப் பேசி.
போராடி மீட்டோம் சுபவாழ்வு ஆட்சி,
சீரோடு காக்கும் நாம்போடும் ஓட்டு.

கொ.பெ.பி.அய்யா.


Tuesday 23 March 2021

பாரிவள்ளல் எடப்பாடியார்.

வாரி வழங்கும் பாரிவள்ளல்
மாரி புகழ் எடப்பாடியார்.
ஏழை பாழை தோழரவர்
வாழும் உழவர் காவலவர்.

வள்ளல் எடப்பாடியார்.

அள்ளிக் கொடுக்கும் வள்ளலார்
உள்ளம் தங்கம் எம்ஜியார்.
உள்ளபடி விவசாயிதான்
சொல்லும் புகழ் எடப்பாடியார்

ஏழைகளின் சுமைதாங்கி
வாழவைத்தார் கடன்நீங்கி.
தோழராய் குசேலர்
சோழராய் எடப்பாடியார்.

மகளிற்கு சோதரராய்
உகந்தசீர் ஆதரராய்
தேவையென்ன கேட்டறிவார்
சேவகராய் எடப்பாடியார்.

மழைக்கவர் சொந்தக்காரர்
செழிக்கும் வளம் சிந்தைக்காரர்.
வற்றாத நீர் நிலைகள்
சுற்றம் கொண்ட எடப்பாடியார்.

கொ.பெ.பி.அய்யா.

Saturday 22 August 2020

நன்றி!நன்றி!நன்றி!

தம்பி வெம்பூரார் நம்பியவர்கு,
நம்பி ஈந்த பணியதற்கு;
மாவட்ட இணைச் செயலதற்கு:
ஆணையிட்ட கழகம் போற்றி!

புரட்சி யென்னும் புகழதற்கு,
சரித்திரம் எம்ஜியாரம்மா அவர்கு;
பேராளும் எடப்பாடி பன்னீரார்கு:
சமர்ப்பணம் நன்றி!நன்றி!

தேர்ந்து உவந்த ஏந்தல்தகு
கூர்ந்த செம்மல் மாண்புமிகு;
அமைச்சர் வெகு கடம்பூரார்கு;
சமர்பித்தோம் நன்றி!நன்றி!

விளாத்திகுளம் மக்கள் தொகுதி,
உளம்வாழும் இளம் வழுதி;
பொற்கால செயல் மிகுதி;
நற்பேர் சின்னப்பர்க்கு நன்றி!நன்றி!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 19 August 2020

பொய் விளக்கும் சுதந்திரம்.

நிலம் தேடும் நாடோடிகள்,
விலையாகும் கொள்கை மாறிகள்.
குளம் தேடும் மீன்கொத்திகள்,
களம் ஆடும் அரசியல்வாதிகள்.

குச்சி தோறும் பட்சிகள்,
கட்சி தாவும் ஒற்றர்கள்.
அரசியல் மேடைப் பேச்சு,
விரசியல் மேலுப் பூச்சு.

வீசிய தடித்த சொற்கள்
பாசத்தின் உச்சம் என்பார்.
வேசியெனக் கூச மாட்டார்.
வசையும் வாழ்த்து என்பார்.

திக்கறியா திசை மாறிகள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்.
எக்கணம் எவர் எங்கோ!
வெக்கம் கெட்ட அரசியல்.

நேசம் எல்லாம் வேசமோ!
வேசி மொழி அரசியலோ!
பதிவான முழக்கம் எல்லாம்:
சுதந்திரம் விளக்கும் பொய்யோ!

கொ.பெ.பி.அய்யா.